Posts

*ஆவணி ஞாயிறுகளில் தரிசிக்க வேண்டிய ஆதவனின் தலங்கள்*

Image
  *ஆவணி ஞாயிறுகளில் தரிசிக்க வேண்டிய ஆதவனின் தலங்கள்* ஞாயிறு திருத்தலம், சென்னையிலிருந்து 30 கி.மீ தொலைவில், செங்குன்றத்திற்கு அருகில் உள்ளது. இந்த புஷ்பரதேஸ்வரரை வணங்கி சூரியபகவான் பேறு பெற்றார். அவர் உருவாக்கியதுதான் இங்குள்ள சூரிய புஷ்கரணி. சூரியதசைபுத்தி, நடப்பவர்கள் இத்தலத்தில் தனி சந்நதியில் அருளும் சூரியனை ஞாயிற்றுக்கிழமையன்று வணங்கி பேறுகள் பெறுகின்றனர்.  * சென்னை, ராமாபுரம் அருகே குன்றத்தூர் கெருகம்பாக்கத்தை அடுத்த கொளப்பாக்கத்தில் ஒரு சூரியதலம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இத்தல ஈசனை சூரிய பகவான் வணங்கியிருக்கிறார். ஆறு வாரங்கள் தொடர்ந்து ஈசனை வணங்க தடைகள் தவிடுபொடியாகின்றன.   * கும்பகோணத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள திருமங்கலக்குடியில் அருளும் பிராணநாதேஸ்வரரும், அன்னை மங்களாம்பிகையும், நவகிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர்கள். சூரியனார் கோயிலை தரிசிக்கும்முன்பு இத்தலத்தை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.   * திருவாரூர் - மயிலாடுதுறை சாலையிலுள்ள பேரளத்திற்கு அருகே உள்ளது திருமியச்சூர். சூரியனின் ஒளி நல்லவை கெட்டவை இரண்டிற்கும் உதவுவதால் கெ...

சட்டுனு எடை குறையணுமா? இந்த ஜூஸ் குடிச்சா போதும்!!

Image
  * சட்டுனு எடை குறையணுமா? இந்த ஜூஸ் குடிச்சா போதும்!!* 💚❤️ எடை இழப்புக்கு இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள். அதே சமயம் உடல் பருமன் காரணமாக பல பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. அதிக கொழுப்பு, இதய பிரச்சினைகள் போன்ற உடல் உபாதைகள் எடை அதிகரிப்பு காரணமாக உருவாகின்றன. எனினும், விரைவாக எடையை குறைக்கவும் பல வழிகள் உள்ளன. இவற்றின் மூலம் ஆரோக்கியமான வழியில் எளிதாக எடையை குறைக்கலாம். நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் எலுமிச்சை மற்றும் இஞ்சி சாறு சேர்க்க வேண்டும். எலுமிச்சை மற்றும் இஞ்சி உங்கள் தொப்பை கொழுப்பை வேகமாக கரைக்கும் வல்லமை படைத்தவையாகும். மறுபுறம், இவற்றை தினமும் உட்கொண்டால், உடல் ரீதியான பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். இஞ்சி மற்றும் எலுமிச்சை சாற்றின் நன்மைகள்: வயிற்று கொழுப்பை குறைக்க: தொப்பையை குறைக்க இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு அருந்தலாம். வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள...

* மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்..?*

Image
  * மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்..?* _____________________ 1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது..! காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 2.மிக அதிகமாகச் சாப்பிடுவது..! இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல்..! மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்..! நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. 5.மாசு நிறைந்த காற்று..! மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும். 6.தூக்கமின்மை..! நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும். 7. தலையை மூடிக்கொண்டு தூங்குவ...

சென்னை அருகே உள்ள நவக்கிரக தலங்கள்

Image
  சென்னை அருகே உள்ள நவக்கிரக தலங்கள் நவக்கிரகங்களான சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்ரன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியவற்றுக்கான சிறப்பு தலங்கள், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ளன. அதேபோல் சென்னை பெருநகரைச் சுற்றிலும் நவக்கிரக தலங்கள் இருப்பது விசேஷமானதாகும். அந்த தலங்களைப் பற்றி சிறிய குறிப்புகளாகப் பார்க்கலாம் கொளபாக்கம் கொளப்பாக்கத்தில் அகஸ்தீஸ்வரர் கோவில் இருக்கிறது. 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஆலயம், சூரியனுக்குரிய தலமாக போற்றப்படுகிறது. இந்தக் கோவிலில் உள்ள சிவலிங்கத்தை, முன்காலத்தில் சூரிய பகவான் வழிபாடு செய்ததாக புராணங்கள் சொல்கிறது. சென்னையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் குன்றத்தூர் செல்லும் சாலையில் இந்த திருத்தலம் உள்ளது. சோமமங்கலம் சென்னை நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சோமமங்கலம் உள்ளது. பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான திருக்கோவிலாக, இங்குள்ள சோமநாதீஸ்வரர் திருக்கோவில் திகழ்கிறது. தட்சனின் சாபத்தால் சந்திரன் தேய்ந்தான். அவன் இங்குள்ள வினைத் தீர்த்தம் என்ற குளத்தில் நீராடி, லிங்கம் ஒன்றை நிறுவி வழிபாடு செய்தான். இதனால...

ராஜ்கிரண்

Image
ஹேப்பி பர்த் டே ராஜ்கிரண் சார் நம்முடைய மனசு என்ன நினைக்கிறதோ அது தான் நிகழும். போராடினால் நிச்சயம் வெற்றி அடைய முடியும். நமக்கான இடம், நிச்சயம் நமக்காகக் காத்திருக்கும். இந்த வார்த்தைகளையெல்லாம் நடிகர் ராஜ்கிரணுடன் பொருத்திப் பார்க்கலாம். ரசிகர்களுக்கு சினிமா பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால் சினிமா ஒரு வாழ்க்கை. சினிமா எத்தனையோ பெயரை வாழவைத்திருக்கிறது. அப்படி, சினிமாவால், சினிமாவுக்காக வாழும் நடிகர் ராஜ்கிரணுக்கு இன்று பிறந்த நாள். ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் நடிகனாக நமக்குப் பரிச்சயமான ராஜ்கிரண் நடிகர் மட்டுமல்ல. இவரின் வாழ்க்கை, நிச்சயம் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும். அதற்காக, அவரைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு கதை ஒன்றிருக்கிறது. “சினிமா என்னுடைய லட்சியம். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்றே ஊரிலிருந்து ஓடிவந்தேன்” என்கிற சீனெல்லாம் ராஜ்கிரணிடம் இல்லை. இராமநாதபுரத்துக் காரரான இவருக்கு நன்றாக படித்து ஐபிஎஸ் எழுதி போலிஸாக வேண்டும் என்பதே ஆசை. ஆனால், வீட்டில் சூழல் இவரை 16 வயதிலேயே வேலை செய்ய சென்னைக்கு அழைத்து வருகிறது. எங்கெங்கோ வேலை தேடிப் பிறகு, சினிமா விநியோக கம்பெனி ஒன்ற...

திருச்சிற்றம்பலம் / என் பார்வையில்/ திரைப்பட விமர்சனம்/அனிதா சந்திரசேகர்

Image
  திருச்சிற்றம்பலம்  : என்  பார்வையில்/ திரைப்பட விமர்சனம் BY  அனிதா சந்திரசேகர்  ஹீரோயிசம் என்ற வழக்கமான சினிமாத் தனம் இல்லாமல் நம் பக்கத்து வீட்டு பையன் போல் முதல் காட்சியிலே  என்ட்ரி ஆகிறார் தனுஷ்...உணவு டெலிவரி செய்யும் டெலிவரி பாயாக திருச்சிற்றம்பலம் எனும் கேரக்டரில் வரும் தனுஷ் தாத்தாவுடன் கிண்டலடித்துக் கொண்டே தோழமையாக இருப்பதும், அவ்வப்பொழுது கோபக்கார அப்பாவுடன் மோதலும், தோழியுடன் கேலியும் கிண்டலும், இரண்டு காதல் நிராகரிக்கப்பட்ட ஏமாற்றத்தால் புலம்பலும் என ஹீரோயிசம் இல்லாத நடுத்தர குடும்பத்து பையனாக தன் தேர்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார் தனுஷ். இது தான் தனுஷுற்கான களமும் கூட.. இப்படியான தனுஷை தான் அனைவருக்கும் ஏனோ பிடித்தும் போகிறது... படத்தின் மிகப்பெரிய பலமே கதாபாத்திர தேர்வுகள் தான்.அனைவருமே அவரவருக்கான கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்தது மட்டுமில்லாமல் கச்சிதமாக பொருந்தியுள்ளனர்.. தனுஷின் அப்பாவாக  வரும் பிரகாஷ் ராஜ், இன்ஸ்பெக்டராக, மகனுக்கு அப்பாவாக, தந்தைக்கு மகனாக சில செண்டிமெண்ட் காட்சிகளிலும்  தனக்கான கேரக்டரில்  சிறப்பாக நடித்து...

: முடியவே முடியாது என்ற பாரதிராஜா... முயற்சித்த பாக்யராஜ்... கவுண்டமணி என்ற காமெடியன் உருவான கதை!

Image
: முடியவே முடியாது என்ற பாரதிராஜா... முயற்சித்த பாக்யராஜ்... கவுண்டமணி என்ற காமெடியன் உருவான கதை! கவுண்டமணியை போடலாம் என பாரதிராஜாவிடம் பரிந்துரை செய்கிறார் பாக்கியராஜ். ‛அட போயா... அந்த ஆளு முடியும்.. அதுவும்... அவனை போய் போட சொல்ற...’ என எடுத்த எடுப்பிலேயே மறுக்கிறார் பாரதிராஜா. ப்ளாஷ்பேக்: முடியவே முடியாது என்ற பாரதிராஜா... முயற்சித்த பாக்யராஜ்... கவுண்டமணி என்ற காமெடியன் உருவான கதை! கவுண்டமணி-பாக்யராஜ் கவுண்டமணி என்கிற பெயரை கேட்கும் போதே நாம் சிரிப்போம். 70களிலும், 80களிலும், 90களிலும் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர். பேச்சுக்கு பேச்சு கவுண்டர் கொடுப்பவர். அவரிடம் யாரும் பேசி ஜெயிக்க முடியாது. இதுதான் நாம் கவுண்டமணி பற்றி அறிந்தவை அது உண்மையும் கூட. ஆனால் அதே கவுண்டமணி பகலும், இரவுமாக காத்துக் கிடந்து, தனக்கு யாராவது வாய்ப்பு தர மாட்டார்களா என ஏங்கிய பொழுதுகளை நாம் அறிந்ததுண்டா? சினிமாவில் வெற்றி எளிதல்ல. எளிதில் ஜெயித்தவர்கள், நிலைத்ததில்லை. சிரமங்களை கடந்தவர்கள் சிகரத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அப்படி ஒருவர் தான் கவுண்டமணி. பாரதிராஜா முடியவே முடியாது என்றவருக்கு...