Posts

கட்டபொம்மனாக நடிக்க உயிரையே பணயம் வைத்த சிவாஜி…

Image
  கட்டபொம்மனாக நடிக்க உயிரையே பணயம் வைத்த சிவாஜி… நாடக மேடையில் ஒரு துயர சம்பவம் … சிவாஜி கணேசனின் நடிப்பில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படம் காலத்துக்கும் பேசப்படும் திரைப்படமாக அமைந்தது. இதில் சிவாஜியின் கம்பீரமான நடிப்பு பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்தது.\ சிவாஜி கணேசன் சிறு வயதில் இருந்தே வீரபாண்டிய கட்டபொம்மனின் நாடகத்தில் எப்படியாவது கட்டபொம்மன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்தாராம். அதன் பின் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வளர்ந்த பிறகு தனக்கு சொந்தமான நாடக கம்பெனியில் “வீரபாண்டிய கட்டபொம்மன்” நாடகத்தை அரங்கேற்றினார். அதில் வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்து தனது பல நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்டார். இந்த நாடகத்தில் சிவாஜியின் கம்பீரமான நடிப்பை பார்த்த பி.ஆர்.பந்துலு இதனை திரைப்படமாக உருவாக்க முடிவு செய்தார். இவ்வாறுதான் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் உருவானது. இந்த நிலையில் “வீரபாண்டிய கட்டபொம்மன்” நாடகத்தில் சிவாஜி கணேசன் நடித்தபோது அவருக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை குறித்து பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன...

மனதை உருக்கிய பாடலில் நடிக்க மறுத்த ரஜினி!

Image
  மனதை உருக்கிய பாடலில் நடிக்க மறுத்த ரஜினி!.. என்ன காரணம் தெரியுமா..? இசைஞானி இசையில் வெளிவந்த ஜனனி ஜனனி மிகவும் பிரபலமான பாடலாகும். அப்பொழுது மன்னன் படத்தை இயற்றிக் கொண்டிருக்கும் இயக்குனர் பி.வாசு அந்த பாட்டை போல் ரஜினிகாந்திற்கு அறிமுக பாட்டு வேண்டும் என்று இசைஞானியிடம் கேட்டார்.  அதற்க்கு இளையராஜா” அந்த மாதிரி பாடல்கள் எல்லாம் உருவாக்க தனி அருள் வேண்டும். உங்களுக்கு அதே பாணியில் வேறொரு பாட்டை உருவாக்கி தருகிறேன்” என்றார். ”அம்மா என்றழைக்காத உயிரில்லையே ”என்ற பாடலை கவிஞர் வாலியின் வரிகளில் கே.ஜே யேசுதாஸ் குரலில் அமைத்து கொடுத்தார். ரஜினிகாந்தின் அறிமுக பாடல் இப்படத்தில் மாறுபட்ட கோணத்தில் இருந்ததால் இதில் ரஜினிகாந்த் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.  இச்செய்தி இளையராஜாவின் காதிற்கு சென்றது. அவர் ரஜினியிடம் இதைப் பற்றி கேட்டார். அதற்கு ரஜினி ” என் ரசிகர்கள் எப்போதும் துள்ளலான பாடல்களை தான் விரும்புவார்கள். இப்பாடல் மிகவும் மெதுவாக செல்கிறது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று கூறினா ர் அதற்கு இளையராஜா” இப்பாடலில் நீங்கள் நடிக்கும் பொழுது அறிமுக பாடல் மாறுபட்டு இர...

பா விஜய்

Image
  என்னுடைய உதவியாளராக பா விஜய் சேரும் போது பாடல் எழுதுவதற்காகத்தான் வந்தேன் என்றார். ஆனால் அவரிடத்தில் ஏரளாமான திறமைகள் இருந்திருக்கிறது. அதைப் பற்றி என்னிடம் சொல்லவேயில்லை. இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். அவருடைய உதவியாளர் இங்கு பேசும் போது, பாடல் எழுதும் பயிற்சி பெறும் போதே பகுதி நேரமாக அவர் இசைபயிற்சியையும் எடுத்திருக்கிறார் என்று சொல்லிவிட்டார். இந்த படத்தின் கதையை டிரைலரிலேயே பா விஜய் சொல்லிவிட்டார். இந்த படத்திற்கு இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகர் என்னுடைய படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், என்னுடைய உதவியாளர் விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதற்காக அவரை பாராட்டுகிறேன். அதே போல் விஜயின் கனவுகளை நனவாக்குவதற்காக அவருடைய தந்தையார் அளித்து வரும் ஒத்துழைப்பு மறக்க முடியாது. இந்த படத்திற்காக பா விஜய் உழைத்த உழைப்பு எனக்கு தான் தெரியும். கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பு எப்போதும் வீணாகாது என்பது என்னுடைய நம்பிக்கை. அதே போல் பா விஜய், பாடல் ஆசிரியராக அறிமுகமாகி, அதற்கு பின் இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிற...

படையப்பா படத்திற்காக "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன்

Image
  படையப்பா படத்திற்காக "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரூ. 1 ,00,00,001(ரூபாய் 1 கோடி மற்றும் ஒரு ரூபாய்) சம்பளமாக வழங்கப்பட்டது. நடிப்பிற்காக அவர் வாங்கிய முதல் மற்றும் ஒரே ஒரு கோடி ரூபாய் சம்பளம் இந்த படத்தில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 1980 களுக்குப் பிறகு சிவாஜி கணேசன் அவர் நடித்த எந்த படத்திற்கும் தனக்கென சம்பளத்தை நிர்ணயிக்காமல் அந்தந்த படத்தின் தயாரிப்பாளர்களிடம் "உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எனக்கு கொடு" என்று கூறி விடுவாராம். உதாரணத்திற்கு அவர் விஜய்யுடன் நடித்த "ஒன்ஸ்மோர்" படத்திற்காக எஸ்.ஏ சந்திரசேகரிடம் ரூ.100 மட்டுமே முன்பணமாக பெற்றியிருக்கிறார். அதன் பின்னர் மொத்தமாக எஸ்.ஏ சந்திரசேகர் சிவாஜிக்கு 10 லட்சம் சம்பளமாக கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி 1992 ஆம் ஆண்டு "உலகநாயகன்" கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த "தேவர் மகன்" திரைப்படத்திற்காக 20 லட்சம் சம்பளமாக சிவாஜி பெற்றியிருக்கிறார். அந்த பணத்தை கூட படத்தின் வியாபாரம் முடித்த பிறகு வழங்குமாறு தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்கிறார். அதே போல் "படையப்பா...

உலக திருமண தினம் (World Marriage Day)

Image
  உலக திருமண தினம் (World Marriage Day) இந்த சர்வதேச திருமண தினம் அப்படீங்கறச்து 1986ம் வருஷத்துலே இருந்து பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. திருமணம் என்பது ஒரு சமூக, சட்ட உறவுமுறையாகும். திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. திருமண பந்தத்தை உறுதிப்படுத்தி, தியாகத்துடன் வாழ்வதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருட உலக திருமண தினம் இன்றாகும். அந்த வகையில், உலகளாவியரீதியிலான சில திருமண பாரம்பரியங்கள் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பான சில சுவாரசியமான தகவல்கள் உங்களுக்காக. ۞۞ மொங்கோலிய நாட்டில் "டாவூர்" இன குழும மக்கள் திருமண திகதியை நிச்சயிப்பதற்காக வித்தியாசமானதொரு பாரம்பரிய முறையினை கைக்கொள்கின்றார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகனும், மணமகளும் கோழியொன்றினைக் கொலை வேண்டும். பின்னர் அவர்கள், உயிரற்ற கோழியின் உடற்பாகத்தினை வெட்டி அதன் ஈரலினை பரிசோதிக்க வேண்டும். அந்த ஈரல் ஆரோக்கியமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்குமானால் தம்பதிகளின் திருமணத் திகதி அறிவிக்கப்படும். அவ்வாறு இல்லையேல், ஆரோக்கியமாகவும்,...

ஆபிரகாம் லிங்கன் பர்த் டே டுடே

Image
  ஆபிரகாம் லிங்கன் பர்த் டே டுடே ஒரு மனிதர் தன்னுடைய 21 வயதில் வியாபாரத்தில் படுதோல்வி அடைந்தார். தனது 22வது வயதில் மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினர். தனது 24 வது வயதில் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி அடைந்தார். தனது 26 வது வயதில் இளம் மனைவியை இழந்து துன்பத்தில் மூழ்கினார். தனது 27 வயதில் நரம்புத் தளர்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டார். தனது 34வது வயதில் கட்சிப்பதவிக்கான தேர்தலில் தோல்வியடைந்தார். தனது 45வது வயதில் செனட்டர் பதவிக்கான தேர்தலில் தோற்றார். தனது 47 வது வயதில் உதவி ஜனாதிபதிக்கான தேர்தலில் தோற்றார். மீண்டும் தனது 49வது வயதில் செனட்டர் பதவிக்கான தேர்தலில் தோல்வி. இவ்வாறாக தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்த பிறகு தனது 52வது வயதில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வெற்றி பெறுகின்றார். அவர்தான் ஆபிரகாம் லிங்கன், ஆம்! எந்தத் தோல்வியும் அவருடைய முயற்சிகளை முடக்கிவிடவில்லை. முயற்சிகள் தொடர்ந்தால் தோல்விகள் எப்பொழுதும் நிலையானது அல்ல என்பதைத்தான் அவருடைய வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் பாடம். எக்ஸ்ட்ரா ஒரு இண்டரஸ்டிங் ரிப்போர்ட்: ஆப்ரகாம்லிங்கன் தனது 15-ஆம் வயதில் கல்வி கற்க துவங்கி...

ஜி.யு.போப்

Image
  ஜி.யு.போப் காலமான தினமின்று கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர்.கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் (இளவரசர் எட்வர்ட் தீவு) என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார். விவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839-ல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார். தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை, இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நட்பாகி ஞான சிகாமணி என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். அதனால் ஒரு துவக்க பள்ளிக்கு அவர் பெயரை சூடினார் போப். தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். 1850-ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற போப் அங்கு என்ற பெண்ணை திரு...