நிசப்தம் /கவிதை

 


நிசப்தம்

'''''''''''''''''''''''''''''''''


ஒலிப்பான்களோடு
பழகிய
காதுகளுடன்
புரண்டு அழும்
பகலுக்கு
பின்னால்
அடர்ந்த காடுகளை
நினைவு படுத்தும்
என் வீட்டு மரங்களின்
பூக்களை
பறவைகள்
சற்றே உதிர்க்க
மெலிதாக
சிணுங்கிய
காற்றுடன்
கலந்தே வருகிறது
இரவின்
கருமையாக
படிந்து கிடக்கும்
நிசப்தம்
-மஞ்சுளா

Comments

அருமை.. இரவின் இருண்ட தாலாட்டு..
Pavendan said…
Manjula effortlessly weaves word pictures and succeeds in stunning the reader with some familiar thing by strategical placement.Manjula conjures up murmuring winds that somehow transport the hushed silence too! Enjoyable.
Pavendan

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,