நாங்க சொல்றது தான்.. ரஜினியை மடக்கிய சன் பிக்சர்ஸ்
பட்டது போதும், இந்த வாட்டி நாங்க சொல்றது தான்.. ரஜினியை மடக்கிய சன் பிக்சர்ஸ் அண்ணாத்த அம்போ முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால் அந்த படத்தில் யார் இயக்குனர் யார் இசையமைப்பாளர் யார் நடிகை என்பதை எல்லாம் அந்த நடிகர்கள்தான் தீர்மானம் செய்வார்கள் எனவும் அதற்கான பட்ஜெட் என்னவானாலும் தயாரிப்பு தரப்பு ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்கிற வழக்கம் சினிமாவில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஆனால் இப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் நடிகர்களை கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளது நல்ல முறையாக பார்க்கப்படுகிறது. தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், ரஜினி, கமல் போன்றோர் தங்களது படங்களில் அதிகம் தலையீடு வைத்து வருவதாக கடந்த சில வருடங்களாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவர்களே தயாரிப்பாளர்களுக்கு உங்கள் இஷ்டப்படி நடந்து கொள்ளுங்கள் என்று சொல்வது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் சில சமயங்களில் அவர்களின் தலையீடு இருக்கத்தான் செய்கிறது என்கிறது சினிமா வட்டாரம். சரி அண்ணாத்த விஷயத்துக்கு வருவோம். ரஜினி மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி கலவையான விமர்சன...