ஆவடி மோரை ஊராட்சி கன்னியம்மன் நகரில் கோலாகலமான தைத்திருநாள் கொண்டாட்டம்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மோரை ஊராட்சி கன்னியம்மன் நகரில் கோலாகலமான தைத்திருநாள் கொண்டாட்டம் ஆவடி.ஜன-15. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மோரை ஊராட்சி புதிய கன்னியம்மன் நகரில் உள்ள இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் மாலைநேர திறண்வளர் மையத்தில் 14.01.2023 அன்று காலை 11மணி முதல் மதியம் 2.30 மணி வரை கோலாகலமாக பொங்கல் தைத்திருநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டாளரும் சமூக ஆர்வலருமான அல்லா பகேஷ் அவர்கள் கலந்துக்கொண்டார். இந்த பொங்கல் தின விழாவில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் புத்தாடை அணிந்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து, குழந்தைகளின் ஆடல் பாடலுடன் உங்கள் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பொங்கல் கொண்டாடப்படுவதற்கான நோக்கம் என்ன என்பதை பத்தாம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி அருமையாக விளக்கி நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் குழந்தைகள் புத்துணர்ச்சியுடன் ஆடல் பாடல்கள் நடனமாடி கூடியிருக்கும் குழந்தைகளுக்கு சந்தோசத்தை கொடுத்தனர். முன்னதாக குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கு...