Posts

ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும்

Image
நடிகர் ரஜினிகாந்துடன் மேற்கொண்ட காட்டு சாகச பயணம் குறித்து பெருமிதமாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பியர் க்ரில்ஸ். உலக புகழ்பெற்ற பியர் க்ரில்ஸின் காட்டு பயண சாகசமான ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் இதுவரை கலந்து கொண்டுள்ளனர்.  அ தற்போது நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நேற்று நடைபெற்ற ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ரஜினிகாந்துக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. காயம் ஏற்படவில்லை என்றும் ஷூட்டிங் நல்லபடியாக நடந்து முடிந்ததாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். ரஜினிகாந்துடன் காட்டில் பயணித்தது குறித்த தந்து அனுபவங்களை பியர் க்ரில்ஸ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ”பிரதமர் நரேந்திர மோடியுடன் செய்த பயணத்தை டிவி வரலாற்றிலேயே 3.6 பில்லியன் பேர் பார்த்திருந்தார்கள். எங்களது புதிய தொடருக்கு ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார். தொடர்ந்து கேப்டன் மார்வெல் புகழ் ப்ரீ லார்சனோடு சாகச பயணம் செய்யவிருக்கிறார் பியர் க்ரில்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய செய்தித்தாள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து

Image
29 ஜனவரி  தேசிய செய்தித்தாள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.       சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம் போன்ற தூண்களைக் கொண்ட ஜனநாயக மாளிகைக்கு நான்காவது தூணாக பத்திரிகை துறை திகழ்வதாகவும், அத்துறையினர்  பூரண சுதந்திரத்தோடு, நாட்டு மக்களுக்கு நற்பணிகளை தொடர்ந்திட வாழ்த்துவதாக முதலமைச்சர் பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.    இதுபோல, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலக நிகழ்வுகளை உடனுக்குடன் உண்மை தன்மையுடன் வழங்கிட இரவு பகல் பாராது உழைக்கும் ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிக்கை மற்றும் ஊடகவியல் துறையினருக்கு தமது உளமார்ந்த தேசிய செய்தித்தாள் தின நல்வாழ்த்துகளை  தெரிவிப்பதாக கூறியுள்ளார். 

திரைஇசைப்பாடல்களில் அசலும் நகலும் .. பகுதி  4

Image
திரைஇசைப்பாடல்களில் அசலும் நகலும் உமாகாந்த் பகுதி  4 இன்றைக்கு அசல் பாடல் Naina Barse Rim Zim   என்ற இந்தி பாடல்   பாடலை எழுதியவர்:   Raja Mehdi Ali Khan        இசை :மதன் மோகன் பாடியவர்  : : Lata Mangeshkar   படம்  ;Hindi film Woh Kaun Thi (1964)  நடிப்பு ; மனோஜ்குமார் .சாதனா கேளுங்க பாருங்க  இந்த பாடலை       நகல் லதாவுக்கு இணையாக சுசீலா அம்மா இரண்டு பேரும் இசைக்குயில்கள்தானே   இந்த Woh Kaun Thi இந்தி படத்தை பி எஸ் வீரப்பா தமிழில் remake செய்ய வேதா இசையில் அப்படியே ஒரிஜனல் பட பாடல்களை தமிழில் தர பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்.கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் அனைத்தும் இந்தி பாடல்களுக்கும் மேலே , தமிழ் பாடல் படம் : யார் நீ (1966)     பாடல்: நானே வருவேன்  பாடல்:  கண்ணதாசன் இசை; வேதா. பாடியவர் ;  .பி.சுசீலா நடிப்பு;  ஜெய்சங்கர் ஜெயலலிதா கேளுங்க பாருங்க  இந்த பாடலை  

இவரை தெரிந்து கொள்ளுங்கள். /கிச்சன் குயின் அலிஸ் வசந்த்

Image
கிச்சன் குயின் என்ற பெயரில் சமையல் கலை பற்றி யூடியூப் சேனல்  மற்றும் முகநூலில் தனி பக்கம் நடத்தி வருகிறார் அலிஸ் வசந்த் . சென்னையில் குடும்பத்தோடு வசித்து வரும் இவரது பூர்வீகம் தூத்துக்குடி  ஆகும். சிறு வயது முதலே சமையலில் ஈடுபாடு கொண்டிருந்த இவருக்கு இவரின் கணவரின் ஆலோசனையின் பேரில் யூடியூபில் சேனல் துவக்கி தான் அறிந்த சமையல் கலையினை மிகவும் எளிதான முறையில் மிகவும் ஆரோக்கியமாக மற்றவர்களுக்கும் பகிர்ந்து வருகிறார். ஆரோக்கியமாகவும் மிக எளிய முறையில் சமைப்பதை மற்றவர்களுக்கும் சொல்லித்தருவதே தனது நோக்கமாக கொண்டிருக்கும் இவர் தனது சேனலில் தினம் தோறும் புது புது உணவு வகைகளை பதிவு செய்து வருகிறார். குறிப்பாக புதிய திருமணம் ஆகி கணவர் வீட்டுக்கு செல்லும் பெண்களில் பலர் சமையல் அறியாமல் இருக்கின்றனர் அவர்களுக்கு எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இவரது சமையல் குறிப்புகள் அமைந்துள்ளது. இவரது சமையல் பதிவுகளை கண்டு பல பேச்சிலர் ஆண்களும் சமையலை கற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சைவம் அசைவம் இரண்டுமே இவருக்கு கைவந்த கலையாக உள்ளது இவரது சேனலை தொடர்ந்து பின்பற்றி வருபவர்கள் பலர் இவர...

கவிதை .//கருமைக்கு பெருமை 

Image
கவிதை பக்கம்         கருமைக்கு பெருமை    இருள் என்றால்  அனைவருக்கும் பயமே  கருமை என்றாலும்  ஒருவித தயக்கமே  காரிருள் மேகம் வரின்  போற்றுவோம் நாமே  நீரின்றி அமையாது உலகு என  பெருந்தகை வள்ளுவர் சொன்னனர்  நீரை சுமந்து வரும் மேகமோ  தேரில் வரும் தேவதையாய்   பாரில் உள்ள அனைவரின்  நீர் பசியை போக்குகின்றாள்  கருமைக்கு  பெருமை சேர்க்கிறாள் ..  #மனதின் ஓசைகள்  - மஞ்சுளா யுகேஷ் .

திருத்துறைப்பூண்டி நெடும்பலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 71 வது குடியரசு தினம்

Image
திருத்துறைப்பூண்டி நெடும்பலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 71 வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது வரவேற்புரை முருகையன் தலைமையாசிரியர் முன்னிலை அம்பிகாபதி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், செல்வராசு பள்ளி மேலாண்மை குழு பொருளாளர், திரு பழனி ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் கொடியேற்றியனார் பிரைட் பியூப்பிள் அறக்கட்டளை சார்பில் பள்ளிக்கு எலக்ட்ரானிக் பெல், மைக் ஸ்பின்ட் வழங்கப்பட்டது பிரைட் பியூப்பிள் அறக்கட்டளையுடன் மூதறிஞர் கலைஞர் பசுமை வளர்ச்சி அறக்கட்டளை இணைந்து மரக்கன்றுகள் நடப்பட்டன மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் செய்தியாளர்  :பாலா. திருத்துறைப்பூண்டி  புகைப்படம் :அமிர்தலிங்கம் 

நாடே போர்க்களமாக மாறிவிட்டது

Image
மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளா , பஞ்சாப் , ராஜஸ்தான் சட்டமன்றங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென்று வலியுறுத்தி  தீர்மானம் நிறைவேற்றியுள்ளது .அதனை முன் உதாரணமாக கொண்டு தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். இதுகுறித்து சட்டசபையில் திமுக கொண்டுவந்த தீர்மானம் பேரவை தலைவர் தனது ஆய்வில் இருப்பதாக தெரிவித்துள்ளார் .வரும் சட்டசபை கூட்டத்தில் அந்த தீர்மானத்தை முன் மொழிந்து ஆளுங்கட்சி , எதிர்கட்சி என்று பேதமில்லாமல் நிறைவேற்ற வேண்டும் .நாட்டில் ஏற்பட்டிருக்கிற பொருளாதார நெருக்குடி , பொருளாதார மந்தநிலை, வேலையின்மை அதிகரிப்பு , தொழிற்சாலைகள் மூடல், தொழிலாளர்கள் வெளிபேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் குடியுரிமை திருத்த சட்டங்களால் பிரச்சினைகளை திசை திருப்புவது மட்டுமல்ல , ஆர்எஸ்எஸ் சொந்த கொள்கையை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தை பாஜக தவறான முறையில் பயன்படுத்துகிறது. இது பல எதிர்விளைவுகளை உருவாக்கும். இதை எதிர்த்து போராடும் மக்கள் மீது அடக்குமுறை தமிழகம் உட்பட நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகிற...