<no title>
கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில், பிர்பம் நகரை சேர்ந்தவர் அந்தப் பெண். 30 வயது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக அவருக்கு ஒரு ஆணுடன் திருமணம் நடந்தது. இருவரும் இத்தனை ஆண்டுகளாக இனிய மணவாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்கள். இந்நிலையில் அந்தப் பெண், அடிவயிற்றில் கடுமையான வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் கொல்கத்தா நகரத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு புற்று நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் அனுபம் தத்தாவும், புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் சமன்தாசும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தினர். அதில் இதுவரை பெண்ணாக தோன்றி வந்த அந்த பெண், பெண்ணே அல்ல, ஆண் என கண்டறிந்து அதிர்ச்சியில் உறைந்து போயினர். அவருக்கு பெண்ணுக்குரிய உடல் உறுப்புகள் இருந்தன. அவரது குரலும் பெண் குரல்தான். ஆனால் அவருக்கு பிறப்பிலேயே கருப்பையும், சினைப்பைகளும் இல்லை என்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். அந்தப் பெண்ணுக்கு மாதவிலக்கும் வந்தது இல்லையாம். இதுபற்றி டாக்டர் அனுபம் தத்தா கூறியதாவது:- இவ...