Posts

வெனிசுலாவின் முன்னாள் அதிபர் "ஹூகோ சாவேஸ்" பிறந்த தினம்

Image
  தேர்தல் மூலமும் சொஷியலிசப் புரட்சியை உருவாக்க முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்துக்காட்டிய, வெனிசுலாவின் முன்னாள் அதிபர் "ஹூகோ சாவேஸ்" பிறந்த தினம் 1954 ஜூலை 28... ஒரு நாட்டின் முன்னேற்றத்தை முதலாளித்துவ தொழில் மயக் கொள்கை மட்டுமே முன்னேற்றும் என்கிற மேற்கத்திய பொருளாதார ஆலோசனைகள் அடிப்படையற்றவை என்பதை சாவேஸ் தனது ஆட்சியின் மூலம் நிரூபணம் செய்தார். இன்றைக்கு மூன்றாம் உலக நாடுகளின் வளத்தை உலகமயமாக்கல் என்ற பெயரில் உலகப் பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நிலை நாளும் அதிகரித்து வரும் நிலையில், தனது நாட்டு மக்களின் நல்வாழ்வை மட்டுமே முன்னுரிமையாகக் கொண்டு சாவேஸ் கடைபிடித்த தேசப் பொருளாதாரக் கொள்கை மூன்றாம் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக ஆகியுள்ளது. ஒரு இளம் புரட்சியாளராக தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய சாவேஸ், தனது 14 ஆண்டுக்கால ஆட்சியின் மூலம் வெனிசுலா நாட்டை மதிப்பிற்குரிய நிலைக்கு உயர்த்தினார். லெனின், மாவோ, எர்னஸ்டோ சேகுவாரா, பிடல் கேஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்களின் வரிசையில் வரலாற்றில் நிலைத்து வாழும் பேரைப் பெற்று மறைந்துள்ளார் சாவேஸ்

உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினம் இன்று.

Image
  உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினம் இன்று. ஹெப்படைடிஸ் சி எனப்படும் கல்லீரல் நோய், எய்ட்ஸ் நோயை போன்ற ஒரு கொடிய நோய். அதுவும் இது ஒரு தொற்று நோயாகும். இந்த நோயின் தாக்கம் அதிகமாகும் போது கல்லீரலில் புற்று நோய் ஏற்படுகிறது. எனவே இந்த நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். அதன் பொருட்டே ஹெப்படைட்டிஸ் பி என்கிற வைரஸை கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் திரு. புளூம்பர்க் ( Blumberg) – ன் பிறந்த தினமான ஜூலை 28 ஆம் தேதியன்று அவரின் நினைவாக உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. கல்லீரல் 70 சதவீதம் பாதிக்கும் வரை நிறைய பேருக்கு பெரிய அளவில் அறிகுறிகள் எதுவும் தெரிவது இல்லை. ஆனாலும் மஞ்சள் காமாலை போன்றவை உடனடி சிகிச்சையின் மூலம் குணமாகும். அது போல மற்ற கல்லீரல் நோய்களுக்கும் தொடர் சிகிச்சைகள் தடுப்பூசிகள் உள்ளன. ஆனால் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி.

1976 ஆம் ஆண்டின் டாங்ஷான் பெரும் பூகம்பம்

Image
 - ஜூலை 28, 1976 இல் சீனாவின்  தங்ஷானில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 242,000 பேர் கொல்லப்பட்டனர். தங்ஷானில்  சுமார்  85% கட்டிடங்க ள் தரைமட்டமாகின இப்பகுதியில் ஆழமான நிலத்தடி வேலை செய்யும் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர். தங்ஷானில் தப்பிப்பிழைத்த மக்கள் தங்கள் வீடுகளின் இடிபாடுகளை கையால் தோண்டி, தங்கள் அன்புக்குரியவர்களின் சடலங்களை தெருக்களில் அடுக்கி வைத்தனர். 1976 ஆம் ஆண்டின் டாங்ஷான் பெரும் பூகம்பம் இருபதாம் நூற்றாண்டின் மிக மோசமான இயற்கை பேரழிவாக இருந்தது. என்றாலும் பத்து ஆண்டு காலத்தில் தங்ஷான் நகரம் மீண்டும் புனரமைத்து கட்டப்பட்டது, இப்போது 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அங்கு வசிக்கின்றனர். பேரழிவு நிலநடுக்கத்திலிருந்து விரைவாக மீண்ட  தங்ஷான் "சீனாவின் துணிச்சலான நகரம்" என்று அழைக்கப்படுகிறது.

மாஸ்கோவில் மிகப்பெரும் தீ

Image
 இன்று ஜூலை 28, 1493 - ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டது. புனித நிகோலஸ் என்ற கிறித்தவ ஆலயத்தில் ஏற்றப்பட்டிருந்த மெழுகு வத்தி பட்டு முதலில் ஜன்னல்திரை தீப் பிடித்தது. அப்போது வீசிய பெரும் காற்று காரணமாக மாஸ்கோ நகர் முழுவதும் பரவியது. கிரெம்ளின் மாளிகை புனித மேரி ஆலயம் உள்ளிட்ட பெரும் கட்டிடங்கள் தீக்கிரையாயின. அக்காலத்தில் நவீன தீயணைப்பு சாதனங்கள் இல்லாததன் காரணமாக தீயை விரைந்து கட்டுப்படுத்த இயலவில்லை. இத்தீயினால் பெருத்த பொருட் சேதங்கள் உண்டான போதிலும் 200 பேர்கள் மட்டுமே மரணமுற்றனர் என்று சொல்லப்படுகிறது

மெல்லிசைசக்ரவர்த்தி வி.குமார்

Image
  இன்று மெல்லிசைசக்ரவர்த்தி என புகழப்பட்ட   பழம் பெரும் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்  .வி.குமார் அவர்களின்  பிறந்த நாள்.  இவரது இசையமைப்பு சமகாலத்தில் இசையமைத்து வந்த எம். எஸ். விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் போன்றோரின் இசையமைப்பிலிருந்து மாறுபட்ட மெல்லிசையாக காணப்பட்டது. இவர் இந்திய மற்றும் மேற்கத்தேய இசைக்கருவிகளை கலந்து பயன்படுத்தினார்.  இவர் தொடர்ச்சியாக பல கே.பாலச்சந்தர் அவர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து  வந்தார். *புன்னகை மன்னன் பூ விழிக்கண்ணன் ருக்மணிக்காக,  *ஆடி அடங்கும் வாழ்க்கையடா, *மூத்தவள் நீ கொடுத்தாய்" ...  இப்படி அற்புதமான மெட்டுக்களை  அளித்து 60 களின் திரையிசையை மெருகேற்றியவர்களில் வி. குமார் முக்கியமானவர்.  பாலச்சந்தர் அவர்களின் வேறுபட்ட கதைகளுக்குத் தன் தனித்துவமான இசையைக் கொடுத்தவர்.மெல்லிசை இழையோட இவர் வாத்தியங்களைக் கையாளும் பாங்கு மிகவும் அற்புதமானது. உதாரணங்களாக, "மதனோற்சவம்" பாடலில் வரும் கிடார் இசையும், "உன்னிடம் மயங்குகிறேன்" பாடலில் வரும் பியானோ இசையையும் சொல்லலாம்.  எண்ணிக்கையில் குறைவான படங்க...

கம்பனடிப்பொடி சா.கணேசன்

Image
   கம்பனடிப்பொடி சா.கணேசன் என்றழைக்கப்பட்ட சாமிநாத கணேசன் நினைவு நாள் ஜூலை 28.  இவர்  அரசியல்வாதி; சமூக சேவகர்; தமிழ் இலக்கியவாதி; காந்தியவாணர்; கம்பரின் தமிழ் மீது ஈடுபாடு கொண்டவர். காரைக்குடி கம்பன் கழகத்தை உருவாக்கி தமிழகத்தின் பல பகுதிகளில் கம்பன் கழகங்கள் உருவாக வழிகாட்டியவர் சிற்பக் கலை வல்லுநர்; கல்வெட்டாய்வாளர்; தமிழகத் தொன்மவியலாளர். 1927 ஆம் ஆண்டு காந்தியடிகள் காரைக்குடிக்கு வந்தபொழுது இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து, காந்தியடிகளுக்கு பணிவிடை செய்யும் தொண்டர்படையின் தலைவர் ஆனார். செட்டி நாட்டுப் பகுதியில் 1942 ஆம் ஆண்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை வீறோடு சா. கணேசன் நடத்தினார். 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.\ இந்திய தேசிய காங்கிரசில் இருந்து கருத்துவேறுபாட்டின் காரணமாக வெளியேறிய இராசகோபாலாச்சாரியார் தன்னைப் பின்பற்றுவோரின் துணையுடன் சுதந்திராக் கட்சி என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். சா. கணேசன் அக்கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவர் ஆவார். இக்கட்சியின் சார்பில் 1962 ஆம் ஆண்டு தேர்தலில் காரைக்குடி சட்டமன...

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயபால் ரெட்டி முதலாம் ஆண்டு நினைவு நாள்

Image
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயபால் ரெட்டி முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று 1942 ல் பிறந்த இவர் ஓஸ்மானியா பல்கலையில் மாணவர் தலைவராக இருந்தார். 1970 காங்கிரஸ் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இந்திரா பிரதமராக இருந்த போது அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறிது காலம் ஜனதா கட்சியிலும், ஜனதா தளத்திலும் இருந்துள்ளார். பின்னர் காங்கிரசில் இணைந்த அவர், தகவல் மற்றும் தொலை தொடர்பு, நகர்ப்புற வளர்ச்சி பெட்ரோலியத்துறை, அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் பதவிகளை வகித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டு முறை ஆட்சி அமைத்த போது, அதில் அமைச்சராக அங்கம் வகித்துள்ளார். நான்கு முறை, லோக்சபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார்.