Posts

பிறந்த நாள் பரிசாக வைர மோதிரம்

Image
  52 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், அதாவது 1970ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியன்று உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் படப்பிடிப்புக்காக மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஹாங்காங்கில் இருந்தார் நாகேஷ். அப்போது படப்பிடிப்பு குழுவினருக்கு சிறிய பார்ட்டி ஏற்பாடு செய்து நாகேஷே எதிர்பாராத வகையில் அவருக்கு பிறந்த நாள் பரிசாக வைர மோதிரம் அணிவித்து இன்ப அதிர்ச்சி அளித்தார் மக்கள் திலகம். இது அப்போது பத்திரிகைகளில் செய்தியாகவும் வந்தது. தினத்தந்தி, மாலைமுரசு பத்திரிகையில் ஹாங்காங் எனபதில் 'ஹா' வடமொழி என்பதால் 'ஆ'ங்காங் என போட்டிருந்தார்கள். - ஸ்ரீதர் சுவாமிநாதன்

"என்னால் இதுபோல் நடிக்கமுடியாது ஜி...இந்த முயற்சியைக் கைவிட்டுவிடுங்கள்"...

Image
  " என்னால் இதுபோல் நடிக்கமுடியாது ஜி...இந்த முயற்சியைக் கைவிட்டுவிடுங்கள்"... இந்திநடிகர் திலிப்குமார் திரு நாகிரெட்டியிடம் கூறியது... விஷயம் என்னவெனில் திரு ரெட்டிக்கு "எங்க வீட்டுப்பிள்ளை" படத்தை இந்தியில் திலீப்குமாரை நடிக்கவைத்து தயாரிக்க விருப்பம். தலைவருக்கும் இதில் சம்மதம். ரெட்டி அப்படத்தை போட்டுக்காண்பித்தார். உடன் மக்கள்திலகமும் இருந்தார். படம் முழுவதையும் பார்த்துவிட்டு திலீப் சொன்னதாவது.... "எம்ஜிஆர் அளவிற்கு இந்த படத்தில் என்னால் நடிக்கமுடியாது. முக்கியமாக 'நான் ஆணையிட்டால்' பாடல் காட்சியில் எம்ஜிஆர் சாட்டையை சுழற்றியபடி வேலைக்காரர்கள் ஆரவாரம் சூழ ஆடிப்பாடி நடிப்பது எனக்கு சிறிது கஷ்டமான விஷயமே. அந்த ஷாட்ல அந்த வேலைக்காரர்களுக்கும் எம்ஜிஆர் க்கும் இடையில் என்ன ஒரு அன்னியோன்னியம், உற்சாகம். அவர்போல என்னால் அப்படி நெருங்கி நடிக்கமுடியாது. எங்கள் (இந்தி) படங்களில் நாங்கள் வீட்டு வேலைக்காரர்களை இப்படிக் காண்பிக்கமாட்டோம். எங்க மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏனெனில் வேலைசெய்யறவங்க கிட்ட Distance keep up பண்ணுவோம்"... இதற்கு மக்கள...

சிவாஜியுடன் நீங்கள் அதிகம் இணைந்து நடித்ததற்குக் காரணம், உங்களுக்கும் அவருக்கும் இருந்த நட்பா, இல்லை உங்கள் இருவரின் நடிப்பாற்றலா?

Image
  நடிகர் திலகம் பற்றி நாட்டிய பேரொளி பத்மினி - சிவாஜியுடன் நீங்கள் அதிகம் இணைந்து நடித்ததற்குக் காரணம், உங்களுக்கும் அவருக்கும் இருந்த நட்பா, இல்லை உங்கள் இருவரின் நடிப்பாற்றலா? இந்தக் கேள்விக்கான பதிலை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல நேர்காணல்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் பத்மினி. இனி வருவது அவற்றின் தொகுப்பு. இதில் ஒவ்வொரு சொல்லும் பப்பிக்கே சொந்தம். ‘நான் மறக்கமுடியாத ஒருவர் சிவாஜி. கணேஷ் நடிகராக மட்டுமின்றி என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரொம்பவே அக்கறையானவர். பப்பியம்மா என்றுதான் என்னை அழைப்பார். உற்சாகமான மூடில் இருந்தால், பேப் என்று அழைப்பார். நான் நன்றாகத் தமிழ் பேச ஆரம்பித்ததே சிவாஜியால்தான். 1959-ல் நெப்டியூன் ஸ்டுடியோவில் தங்கப்பதுமை படம் எடுத்தார்கள். ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்டர். அதில் வரும் ‘ஈடற்றப் பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்...’ என்ற பாடல், அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தப் பாட்டினூடே நான் கண் பறிக்கப்பட்ட நிலையில் இருக்கும் என் கணவரைப் பார்த்து, ‘அத்தான் உங்கள் கண்கள் எங்கே அத்தான்?’ என்று வீறிட வேண்டும். காட்சி விளக்கப்பட்டதும், நான் ரிகர்சல் எதுவுமின்றி கதற...

எல்லோரும் கொண்டாடுவோம்

Image
  பாவமன்னிப்பு" படத்தில் "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் அவர்கள் முதன்முதலாக படத்தில் தோன்றும் காட்சியில் ஒரு அற்புதமான பாடலை வைத்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார் படத்தின் இயக்குனர் ஏ.பீம்சிங். " மெல்லிசை மன்னர்கள்" விஸ்வநாதன் - ராமமூர்த்தி, இருவரும் "கவியரசர் கண்ணதாசனுடன் அந்த அற்புதமான சூழ்நிலைக்கு அமர்ந்தார்கள். படத்தின் கதைப்படி சிவாஜி கணேசன் முஸ்லீமாக இருந்தாலும், பிறப்பால் ஒரு இந்து வீட்டில் எம்.ஆர். ராதாவுக்கு மகனாக பிறந்திருப்பார். அதன்படி, *அந்த* *நுட்பத்தை* வெளிப்படுத்தும் விதமாக பாட்டு அமைய வேண்டும் என்று விரும்பி இயக்குனர் ஏ.பீம்சிங் இதை கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி அவர்களிடம் தெரிவித்தார். வழக்கம்போல், "மெல்லிசை மன்னர்கள்" மெட்டமைக்க, கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதிக் கொடுத்தார். பாடலை படித்துப் பார்த்த ஏ.பீம்சிங்கிற்கும், விஸ்வநாதனுக்கும் முதலில் ஒன்றும் விளங்கவில்லை. "இதில் என்ன புதுமை இருக்கிறது, நுட்பம் உள்ளது" என குழம்பினார்கள். திரும்ப, திரும்ப படித்துப் பார்த்துவிட்டு கவியரசர் கண்ணதாசனிடம் தயங்கிக் கேட்ட...

கவிஞர் #கண்ணதாசனைப் பற்றி #சுஜாதா

Image
  கவிஞர் #கண்ணதாசனைப் பற்றி #சுஜாதா சொல்கிறார்: 1978 -ல், ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல் பதிவின் போது அவரை நேரில் சந்தித்துக் கொஞ்சநேரம் பேசும் மறக்க முடியாத வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன், ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த விழா மேடையில், ஆசிரியர் மணியன் என்னைக் கவியரசுக்கு மாலை அணிவிக்கச் சொன்னார். அந்த விழாவில், கண்ணதாசனின் தெளிவான பேச்சைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்கு நான் வசனம் எழுதினேன். சங்கீதக் கச்சேரி செய்ய சிங்கப்பூர் செல்லும் இரண்டு இளைஞர்களின் ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப்பைப் பற்றிய கதை. கே.பாலசந்தர் இயக்கிய அந்தப் படத்தில் கமல், ரஜினி இருவரும் நடித்தனர்.எம். எஸ்.விஸ்வநாதன் இசைக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதினார். முதல் பாட்டின் கம்போசிங் சென்னை, ப்ரெசிடென்ட் ஹோட்டல் அறையில் நடைபெற்றது. “நீங்களும் வாருங்கள். கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து பணிபுரிவதைப் பார்ப்பதே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்” என்றார் பாலசந்தர். சென்றேன்.முதலில் ஆர்மோனியப் பெட்டி வந்தது. பின் எம்.எஸ்.வி வந்தார். பட்டனை அழுத்தி, டிபன் வந்தது. அதன்பின், க...

சொற்றொடர் நயம்...(நகை)சுவையாய் மலரும் கவிதை...!

Image
  சொற்றொடர் நயம்...(நகை)சுவையாய் மலரும் கவிதை...! கவியரசர் கண்ணதாசன் எதையும் நயம்படச் சொல்வார். மேடைகளிலும் அப்படித்தான் பேசுவார். அவர் தென்றல் என்ற இலக்கியப் பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருந்த போது, துணை ஆசிரியர் ஒருவர் இரண்டு சினிமா ஸ்டில்ஸ்களை காண்பித்து, சினிமா பகுதியில் பிரசுரிக்க வந்துள்ளது என்றார். படங்களை வாங்கி பார்த்தார் கவியரசர். ஒரு படம் நடிகை ராஜசுலோச்சனா, கதாநாயகனுக்கு காப்பி கோப்பையை கொடுப்பது போல் இருந்தது. அந்த சமயம் ராஜசுலோச்சனா அவர்கள் திரைக்கு வந்த புதிது. மிகவும் அழகான தோற்றத்துடன் இருப்பார். படத்தை பார்த்த கவியரசர் ஒரே நிமிடத்திற்குள், படத்தின் பின்புறம் இரண்டு வரிகளை எழுதியதோடு, அந்த உதவி ஆசிரியரிடம் அதை கொடுத்துவிட்டு சொன்னார்.. "புகைப்படத்திற்குக் கீழே இந்த இரண்டு வரிகள் வரவேண்டும் - படத்துடன் சேர்த்து போட்டுவிடுங்கள்" என்றார். அந்த இரண்டு வரிகள்... "காப்பிக்கு உப்பிட்டு காரிகைதான் தந்தாலும் சாப்பிட்ட பின்புதானே சர்க்கரையின் நினைவு வரும்!" காப்பிக்கு அந்த பெண் தவறுதலாக உப்பு போட்டு கொடுத்தால், கொடுத்த அந்த சிவந்த கரங்களையும், மலர்ந்த முகத்தை...

பிரமாண்ட கொலுவுடன் வடபழனி முருகன் கோவில்

Image
  பிரமாண்ட கொலுவுடன் வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது சென்னை வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பிரமாண்ட கொலு அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை, சென்னையில் உள்ள புகழ்பெற்ற வடபழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. நவராத்திரி திருவிழாவையொட்டி 'சக்தி கொலு' என்ற பெயரில் பிரமாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது. சுதா ரகுநாதன் இந்த கொலுவை பிரபல கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன், கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணை கமிஷனர் முல்லை ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர். அதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அருணின் இசை கச்சேரி நடந்தது. முதல் நாள் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கொலுவை கண்டு ரசித்தனர். சிறப்பு பூஜை நவராத்திரி திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை 108 பேர் கொண்ட குழுவால் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடத்தப்படுகிறது. மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை வேத பாராயணம் நடக்கிறது. காலை 11 மணி முதல் 11.30 ம...