Posts

வீட்டிலேயே ஹோட்டல் சுவை...

Image
  வீட்டிலேயே ஹோட்டல் சுவை... #HowToMakeAtHome ங்கள் விருப்ப உணவுகளை ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் என்கிறார் செஃப் வினோத்குமார். பலருக்கும் விருப்பமான பிரபல ஹோட்டல் ரெசிப்பிகளின் செய்முறைகளை இந்த இதழில் ஆங்காங்கே கொடுத்திருக்கிறார். வடகறி தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3, சோம்பு - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை - 2, கிராம்பு - 2, பிரியாணி இலை - 1, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சிறிய வடைகளாகப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுத்துக் கொள்ளவும். மீண்டும் கடாயில் சிறிது எண்ணெய்விட்டு காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் இஞ்சி ...

வெண்டைக்காய் பக்கோடா

Image
  வெண்டைக்காய் பக்கோடா சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் சுவைக்க ஆசையாக உள்ளதா? அப்படியானால் உங்கள் வீட்டில் வெண்டைக்காய் உள்ளதா? இருந்தால், அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையுடைய பக்கோடா செய்யலாம். இந்த வெண்டைக்காய் பக்கோடா பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். வெண்டைக்காய் பக்கோடா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: * வெண்டைக்காய் - 20 * கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் * மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் * மஞ்சள் தூள் - 1 சிட்டிகை  * கறிவேப்பிலை - சிறிது * உப்பு - சுவைக்கேற்ப * எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு  செய்முறை: *  முதலில் வெண்டைக்காயின் மேல் பகுதியையும், கீழ் பகுதியையும் நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். * பின் அதில் எண்ணெயைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் போட்டு, சிறிது நீரைத் தெளித்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அத...

கொன்றை வேந்தன் | 52.நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக | கவிஞர் ச.பொன்மணி |

Image
  கொன்றை வேந்தன் | 52.நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக | கவிஞர் ச.பொன்மணி | விளக்கவுரை & ஒளிவடிவம் கவிஞர் ச.பொன்மணி

இன்று உலக பசி தினம்.

Image
  இன்று உலக பசி தினம். உணவு கிடைக்காமல் உலகின் பெரும் கூட்டம் வாடிக் கொண்டிருக்க, உணவு வீணடிக்கப்படுதல் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவில் உணவு கிடைக்காமல் பசியுடன் இருப்பவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. எய்ட்ஸ், மலேரியா, காசநோய் உள்ளிட்ட நோய்களால் இறப்பவர்களை விட பசியால் இறப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம் என்று கூறப்படுகிறது பசியால் வாடும் மக்கள் வசிக்கும் நாடுகள் உள்ள பட்டியலில் 100 வது இடத்தில் இந்தியா இருந்துச்சாம்.. இப்போதைய கணக்கு இன்னும் சில மணி நேரத்தில் வரக்கூடும். இத்தனைக்கும் இந்தியாவில் உணவுக்கான உரிமை சட்ட பாதுகாப்பு கொண்ட அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. உலக அளவில் பசியால் வாடும் மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் போஸ்னியா, துருக்கி உள்ளிட்ட 14 நாடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க நாள்தோறும் அவரது உணவின் வாயிலாக 2,100 கலோரி கிடைக்க வேண்டும் என்று ஐ.நா. வரையறுத்திருக்கிறது. உலகின் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களில் 98 சதவீதம் பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்...

சர்வதேச மாதவிடாய்ச் சுகாதார தினம் இன்று

Image
  சர்வதேச மாதவிடாய்ச் சுகாதார தினம் இன்று ஆண், பெண் பாகுபாட்டை காட்டத் தொடங்கும் முதல் நிகழ்வு. பெண்ணிற்கு போடப்படும் முதல் தடைக்கல். இன்னும் 40 ஆண்டுகள் படப்போகும் அவஸ்தைதான் முதல் தடவையாய் வந்துவிட்ட மாதவிடாய். மாதவிலக்கின்பொழுது கருப்பையில் இருந்து 28 நாட்களுக்கு ஒருமுறை இரத்தமும், வழவழப்பான திரவமும் பெண்குறி வழியாக வெளிவரும்; இந்நிலை சாதாரணமாக 3லிருந்து 7 நாட்கள் வரை நீடித்துக் காணப்படும். மாதவிலக்கு பெண் பூப்பெய்தியதிலிருந்து மெனோபாஸ் என்று சொல்லப்படும் சூலக ஓய்வு வரை சுமார் 45 வயதுவரை நீடித்து இருக்கும். அதாவது மாதவிலக்குக்கு 1 வாரத்திற்கு முன்னர் உடலில் கூடுதலாக நீர் சேமித்து வைக்கப்படுகிறது. எடை கூடுகிறது. உடல் பருத்தாற் போலத் தோன்றும். ஆனால் இந்நிலை மாதவிலக்குக்குப் பிறகு மாறிவிடும். நீரும் வெளியேறுவதால் உடலில் இறுக்கம் மட்டுமல்ல மன இறுக்கமும் தளர்கிறது. மாதவிலக்கு பல ஹார்மோன்களின் விளைவுகளேயாகும். மேலும் கருவுறாத நிலையில் மாதந்தோறும் கருப்பையை ஆயத்தப்படுத்தி, குறிப்பிட்ட காலம் கடந்த பின்னர் அந்த ஏற்பாடுகளைக் கலைத்து வெளியேற்றி விட்டு, மீண்டும் ஆயத்தப்படுத்துவது ஹார்மோன்க...

சட்டம் அறிவோம் / *போக்சோ சட்டம்:- POCSO Act:-*

Image
சட்டம் அறிவோம் *போக்சோ சட்டம்:- POCSO Act:-* பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து குழந்தைகளை (சிறார்களை) பாதுகாக்கும் சட்டம். ஆண், பெண் என்ற பாலின வித்தியாசமின்றி  18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளையும் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டு,  2012 ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகின்றது. இந்த சட்டத்தின் பிரிவுகள் பிணைவிடா (Non Bailable) குற்றங்களாகும். இந்த சட்டத்தின்  பிரிவு 3 மற்றும் 4ன் படி குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது குற்றம் ஆகும். இதற்கு குறைந்தபட்சம்  7 ஆண்டுகளும், அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். சட்டப் பிரிவு 5 மற்றும் 6 படி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், காப்பாளர், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். உடன் அபராதமும் விதிக்கப்படும். சட்டப் பிரிவு 7 மற்றும் 8ன் படி குழந்தைகளை அவர்களின் அந்தரங்க உறுப்பைகளை தொடுவது, அல்லது மற்றவரி...

வெறும் ரூ.3899-க்கு இப்படி ஒரு 4G Phone

Image
  வெறும் ரூ.3899-க்கு இப்படி ஒரு 4G Phone-ஆ! ஆளுக்கு 2 வாங்கலாம்  ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து இந்தியாவின் மிகவும் மலிவான 4 ஜி ஸ்மார்ட்போன் ஆக ஐடெல் ஏ 23 ப்ரோ மாடல் வெறும் ரூ.3899 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து இந்தியாவின் மிகவும் மலிவான 4 ஜி ஸ்மார்ட்போன் ஆக ஐடெல் ஏ 23 ப்ரோ மாடல் வெறும் ரூ.3899 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பளபளப்பான கிரேடியன்ட் டோன் பேக் கலர் பூச்சு மற்றும் இரண்டு வண்ண விருப்பங்களில் - சபையர் ப்ளூ மற்றும் லேக் ப்ளூ - வாங்க கிடைக்கிறது. ரூ.9999-க்கு இப்படி ஒரு Phone-ஆ! இனி Poco M3, Realme C25, Samsung M12 எதுக்கு? இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 1 முதல் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்ஸ், மைஜியோ ஸ்டோர்ஸ், ரிலையன்ஸ்டிஜிட்டல்.இன் மற்றும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லறை கடைகளின் வழியாக வாங் கிடைக்கும். சுவாரசியமாக ஜியோ நிறுவனம், ஐடெல் ஏ 23 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ,3,000 மதிப்புள்ள சலுகைகளையும் வழங்குகிறது. ரூ.249 மற்றும் அதற்கு மேலான தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜை தேர்வு செய்யும் பயனர்...