Posts

பாராஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.

Image
 பாராஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.  டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை பவினா பென். கடுமையாக போராடி இறுதிப் போட்டியில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார் பவினா பென் படேல். இதன் காரணமாக வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் பவினா படேல்! இந்தியாவுக்கு முதல் பதக்கம் பாராலிம்பிக்கில்  கிடைத்துள்ளது

சென்னையின் பாரம்பரிய இடங்கள் தொடர் (4)

Image
சென்னையின் பாரம்பரிய இடங்கள் தொடர் (4) இன்று   உட்லண்ட்ஸ் ஹோட்டல் கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் கிருஷ்ணாராவ். இவர் பாரிமுனையில் உள்ள உடுப்பி கிருஷ்ணா என்ற ஹோட்டலில் சர்வராக வேலை செய்து கொண்டிருந்தார்.  இவரது அயராத உழைப்பைப் பார்த்து, ஹோட்டல் முதலாளி இவரிடமே அந்த ஹோட்டலை ஒப்படைத்தார். தனது கடின  உழைப்பால் அந்த ஹோட்டலை ஒரு நல்ல உயர்தர சைவ உணவகமாக உருவாக்கினார்.  அதன் பிறகு பெரிய ஓட்டல் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் வந்த போது, ராம்நாட் ராஜாவிற்கு சொந்தமான பங்களா ராயப்பேட்டையில் இருந்தது. இந்த பங்களாவில் தான் அரசர் இங்கு வரும் போது குடும்பத்துடன் தங்குவார். அவர் வேறொரு இடம் மாறி போவதால் இந்த இடம்  விலைக்கு வருவதாகத் தெரிந்து,  தனது நண்பர்களின் பண உதவியுடன் அந்த பங்களாவை வாங்கி உட்லண்ட்ஸ் என்ற பெயரில் ஹோட்டல் ஆரம்பித்தார்.  அந்தக் காலத்தில் இந்த பகுதி முக்கிய மையமாக இருந்தது. அப்போது மிகவும் பிரபலமாக இருந்த தியாகராஜ பாகவதர் இங்கேதான் தங்கியிருந்தார். அப்பொழுது ஒருநாள் வாடகை ஐந்து ரூபாய் மட்டுமே.  இந்தியா சுதந்திரம் பெற்ற அன்று சுதந்திரம் பெற்றதை கொண...

சென்னையின் பாரம்பரிய இடங்கள் தொடர் (3)

Image
 சென்னையின் பாரம்பரிய இடங்கள் தொடர் (3)  இன்று, ஜெமினி மேம் பாலம் கீழுள்ள இந்த குதிரை வீரன் சிலை.  சென்னையில் நடைபெற்று வந்த குதிரைப்  பந்தயத்தை ஒழித்ததின் நினைவாக,  அப்பொழுது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி் அவர்களால் இச்சிலை 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுவப்பட்டது.  அக்காலத்தில், குதிரைகளை ரேஸ் குதிரையாக வளர்த்து, பந்தயத்தில் ஈடுபடுத்தி அதற்கு பெரும் செல்வம் பரிசாக தரப்பட்டது.  இந்தியா முழுவதும் இந்த சூதாட்டம்   நடந்தது. ஆனால் தமிழகத்தில் தான் இது அதிகம் நடைபெற்றது.  இந்த சூதாட்டத்தில் அதிக பொருட்களை இழந்தது சாமான்ய மக்களே.  இந்த சூதாட்டத்தில் சாமான்யர்களும் பெரும் செல்வந்தர்களும் சினிமா நட்சத்திரங்களும் அதிக அளவில் கலந்து கொண்டு  தங்களுடைய சொத்துக்களை இழந்தனர்.   இக்காலத்தில் மதுவின் சீரழிவு எப்படி இருக்கிறதோ அதே போல் அந்த காலத்தில் குதிரை பந்தயத்தில் சீரழிவு இதைவிட பல மடங்கு அதிகமாக இருந்தது.  அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டிருந்தாலும் பின்னாளில் அவர்கள்  நீதிமன்றத்தில் வாதாடினார்கள்  நீதிமன்றமும்...

குன்றிமணியின் அற்புத பயன்கள் | Wonder Herb KUNDRIMANI

Image
  இயற்கை வைத்தியர் டாக்டர் ரேவதி வழங்கும் குன்றிமணியின் அற்புத பயன்கள் | Wonder Herb KUNDRIMANI video link Wonder Herb KUNDRIMANI குன்றிமணியின் அற்புத பயன்கள் by Dr.S.Revathi's Vlog

தமிழகத்தின் சமூகநீதி மற்றும் ஜாதி எதிர்ப்பு போராளி#அய்யன்காளி

Image
  பிறந்தநாள் இன்று (28 August 1863, - 18 June 1941) பெரியாரைப் போல - கேரளாவின் சம நீதி மற்றும் தீண்டாமை எதிர்ப்புக்கான போராட்டங்களில் முன்னணியில் நின்ற ஒரு ஆளுமை - அய்யன் காளி ஆவார். நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் கேரளாவில் ஜாதிய கொடுமை உச்சத்தில் இருந்தது. அதை உருவாக்கியவர்கள் இந்து சனாதான பிராமணர்கள் . அக்காலத்தில்- பிராமணர்களிடமிருந்து- நாயர் பதினாறு அடி துாரமும் ஈழவர் முப்பத்திரண்டு அடி துாரமும் விலகி நிற்க வேண்டும். நாயரிடமிருந்து- ஈழவர் பதினாறு அடி துாரமும் புலையன் 32 அடி துாரமும் விலகி நிற்க வேண்டும். ஈழவனிடமிருந்து -புலையர் ஆறடி துாரமாவது தள்ளி நிற்க வேண்டும் என்று விதிகள் இருந்தன. அய்யன் காளி பிறந்தது புலையர் சமூகத்தில் ! மாடுகளுக்கு பதிலாக புலையர்களை கட்டி உழும் கொடிய பழக்கம் நடைமுறையில் இருந்தது. தெருக்களுக்குள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்ட காலம் அது. அய்யன்காளி அவற்றையெல்லம் எதிர்த்து கிளர்ச்சி செய்தார். அதோடு இல்லாமல் ஒடுக்கப்பட இன பெண்களுக்கு தோள் சீலை அணியும் உரிமையயும் போராடி பெற்றுத்தந்தார். அவர்களுக்கு என்று தனியே பள்ளிகள் இல்லாமல் இருந்த பொழுது அவர்களுக்கு...

திருச்செந்தூர் ஆவணி திருவிழா கொடியேற்றம்

Image
  திருச்செந்தூர் ஆவணி திருவிழா கொடியேற்றம் இன்று 27.8.2021 காலை ( பக்தர்களின்றி ) சிறப்பாக நடைபெற்றது

நகங்களை வலிமையாக்கும் உணவுகள்

Image
 நகங்களை வலிமையாக்கும் உணவுகள்  கை, கால் விரல் நகங்களை அழகுப்படுத்திக்கொள்ள நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். அவை அழகாக இருப்பதை விட ஆரோக்கியமான வளர்ச்சி நிலையில் இருப்பது அவசியமானது. நகங்கள் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை. அவை பலவீனமாக இருந்தால் உடல் உள்ளுறுப்புகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கும். அதனால் ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் பி உள்ளடங்கிய உணவுகள் நகங்களுக்கு வலிமை சேர்க்கும் தன்மைகொண்டவை. மீனில் ஒமேகா 3 அமிலம் மட்டுமல்லாது கந்தகம், புரதம் போன்றவையும் நிறைந்திருக்கிறது. மெல்லிய, எளிதில் உடையக்கூடிய நகங்களை கொண்டவர்கள் மீன் உணவுகளை சாப்பிடுவது அவசியமானது. அதிலிருக்கும் ஒமேகா 3 அமிலம் நகங்கள் ஈரப்பதத்துடனும், வலுவாகவும் இருப்பதற்கு வழிவகை செய்யும். முட்டையில் புரதம் மட்டுமல்லாது வைட்டமின் டி, வைட்டமின் பி 12, இரும்பு போன்றவை உள்ளடங்கியிருக்கிறது. இவை நகங்களின் தடிமன் அதிகரிப்பதற்கு உதவி புரியும். பச்சை பட்டாணியில் புரதம், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி ஆகியவை இருக்கின்றன. இதனை அடிக்...