Posts

மாசி மகம்

Image
  மாசி மகம் 2021 என்றால் என்ன? : மாசி மகம் புராண நிகழ்வுகள் தெரிந்து கொள்ளுங்கள் மாசி மாதம் என்பது மாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியுடன் வரக்கூடிய மக நட்சத்திர நாளில் இந்துக்களால் மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும் சிறந்த நாளாகும். இந்த அற்புத தினத்தில் கடலாடும் விழா கொண்டாடப்படுகிறது. மாசி மக நட்சத்திரத்தன்று விரதமிருந்து தீர்த்தமாடி கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுபடலாம். மாசி மாதம் என்பது மாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியுடன் வரக்கூடிய மக நட்சத்திர நாளில் இந்துக்களால் மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும் சிறந்த நாளாகும். இந்த அற்புத தினத்தில் கடலாடும் விழா கொண்டாடப்படுகிறது. மாசி மக நட்சத்திரத்தன்று விரதமிருந்து தீர்த்தமாடி கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுபடலாம். ​மகா மக பெருவிழா : தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் தெப்பத்தில் மாசி மகத் திருவிழா, மகாமகம் விளாவாக மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். குரு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார்....

எழுத்தாளர் கவிஞர் டாக்டர் அமுதா பாலகிருஷ்ணனுக்கு... வாழ்நாள் சாதனையாளர் விருது

Image
 எழுத்தாளர் கவிஞர் டாக்டர் அமுதா பாலகிருஷ்ணனுக்கு... வாழ்நாள் சாதனையாளர்   விருது *   *பல்கலை செம்மல் பட்டம்   வைர விழா விருது  புதுக்கோட்டை இலக்கியப் பேரவை  சார்பில் புதுக்கோட்டையில்  21.2. 21 ல் நடைபெற்ற விழாவில், புதுக்கோட்டை இலக்கிய பேரவையின் தலைவர், சொல்லருவி,   தமிழ்ச்செம்மல் முத்து சீனிவாசன் தலைமையில், அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் எஸ். சுப்பையா வழங்கினார்.  புதுகை தென்றல் ஆசிரியர் புதுகை மு. தருமராஜன், மணிமேகலை பிரசுரத்தின் அதிபர் ரவி தமிழ்வாணன், மணிவாசகர் பதிப்பகத்தின் இராம. குருமூர்த்தி, உரத்த சிந்தனையின்  ஹைதராபாத் ராஜு  மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்

இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முலாம்பழம்.

Image
 இதய  ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முலாம்பழம். முலாம் பழத்தில் 95% நீர்ச்சத்துக்கள், விட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ள‌ன. இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, உடலுக்கு தேவையான குளிர்ச்சியைத் தருவதில் சிறந்த பழம் என்று சித்த மருத்துவர்களால் கூறப்பட்டுள்ளது. முலாம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் எண்ணற்ற பலன்களை பற்றி பார்ப்போம்: உடல் எடை முலாம் பழத்தில் சர்க்கரை மற்றும் கலோரியின் அளவு மிகக் குறைவாக உள்ளது. எனவே உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மிக விரைவில் குறையும். புற்றுநோய் முலாம் பழத்தில் கரோட்டினாய்டு அதிகமாக உள்ளது. இது நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைத்து, நமது உடலில் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை வேருடன் அழிக்க உதவுகின்றது. இதய ஆரோக்கியம் முலாம் பழத்தில் உள்ள அடினோசைன், நமது உடம்பின் ரத்த செல்கள் கட்டிப்படுவதைத் தடுத்து, மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கின்றது. கண் பார்வை வ...

விரைவான எடை குறைப்பினால் ஏற்படும் ஆபத்துக்கள்

Image
 விரைவான எடை குறைப்பினால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன...?🌐⛔ ® விரைவான எடை குறைப்பு நிரந்தரத் தீர்வைத் தராது. எடை குறைப்பு என்ற அந்தத் திடீர் மாற்றத்தை உங்கள் உடம்பால் தாங்க முடியாது. எனவே, அதே வேகத்தில் உடம்பில் மீண்டும் எடை அதிகமாவதற்குத் தான் வாய்ப்புள்ளது. ® நீங்கள் வேகமாக உடல் எடையைக் குறைக்கும்போது, உங்கள் உடம்பில் உள்ள நீர்ச்சத்தும் படுவேகமாகக் குறைய ஆரம்பிக்கும். இப்படிச் செய்வதால் மயக்கம்,  கிறுகிறுப்பு, இதய வியாதிகள் ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. தசைகளும் பாதிப்படையலாம்.   ® வேகமாக எடை குறைப்பதற்கான கடும் உடற்பயிற்சி காரணமாக உங்களுக்கு வேகமாகக் களைப்பு ஏற்பட்டு விடும். உடம்பில் கலோரிகளும் மளமளவென்று குறைந்துவிடும். இதனால் சரியான நேரத்தில் உங்களால் தூங்க முடியாது. களைப்பு இருப்பதால் சரியாகத் தூங்கவும் முடியாது.   ® உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்புக்கள் பித்தப் பையில்தான் சென்று சேரும். இந்நிலையில் வேகமாகவும் கடுமையாகவும் உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யும்போது, பித்தக் கற்கள் நிறைய உருவாகி விடும். இது வயிற்றின் உள் பகுதியைப் படிப்படியாக சேத...

ஊக்கம் தரும் கவிஞாயிறு தாராபாரதி

Image
  ஊக்கம் தரும் கவிஞாயிறு தாராபாரதி உட்கார் நண்பா, நலந்தானா? – நீ ஒதுங்கி வாழ்வது சரிதானா? சுட்டு விரல்நீ சுருங்குவதா? – உன் சுயபலம் உனக்குள் ஒடுங்குவதா? ‘புல்லாய்ப் பிறந்தேன் நானென்று’ – நீ புலம்ப வேண்டாம்; நெல்கூட புல்லின் இனத்தைச் சேர்ந்ததுதான் – அது பூமியின் பசியைப் போக்கவில்லை? ‘கடலில் நான்ஒரு துளி’யென்று – நீ கரைந்து போவதில் பயனென்ன? ‘கடலில் நான்ஒரு முத்தெ’ன்று – நீ காட்டு; உந்தன் தலைதூக்கு! வந்தது யாருக்கும் தெரியாது – நீ வாழ்ந்ததை உலகம் அறியாது; சந்ததி கூட மறந்துவிடும் – உன் சரித்திரம் யாருக்கு நினைவுவரும்? திண்ணை தானா உன்தேசம்? – உன் தெருவொன் றேயா உன்னுலகம், திண்ணையை இடித்துத் தெருவாக்கு – உன் தெருவை மேலும் விரிவாக்கு! எத்தனை உயரம் இமயமலை! – அதில் இன்னொரு சிகரம் உனதுதலை! எத்தனை ஞானியர் பிறந்த தரை – நீ இவர்களை விஞ்சிட என்னதடை? பூமிப் பந்து என்னவிலை? – உன் புகழைத் தந்து வாங்கும்விலை! நாமிப் பொழுதே புறப்படுவோம் – வா நல்லதை எண்ணிச் செயல்படுவோம்! இக்கவிதை கவிஞர் தாராபாரதியின் ‘திண்ணையை இடித்துத் தெருவாக்கு!’ எனும் கவிதையாகும். இவர் எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர். தம்மு...

திருச்செந்தூர் மாசிப்பெருந்திருவிழாவில் பத்தாம் திருவிழா தேரோட்டம்.

Image
திருச்செந்தூர் மாசிப்பெருந்திருவிழாவில் இன்று பத்தாம் திருவிழா தேரோட்டம். குமரவிடங்கப்பெருமானாக அடியவர் புடைசூழ அலைவாயழகன் அருள் வழங்கினார். "உயர்ந்த நிலையை அடைய தேரே உருவகமாம். அயர்ந்தே தளராமல் அனைவரும் உழைக்கனுமாம். எரின் முனையாக எண்ணம் நிறைவேற வேரில் நீராக வேலன் துணை வருவான். videolink  தேர்த்திருவிழா  நாளில் தேரோட்டப்பாடல் பாடல், இசை, குரல் கவிஞர் ச.பொன்மணி

தா.பாண்டியன்

Image
  தா.பாண்டியன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் தாவீது (டேவிட்) - நவமணி தம்பதிக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் தா.பாண்டியன் (18.5.1932). அந்தக் காலத்தில் கல்விச் சேவை செய்வதற்காக கிறிஸ்தவ மிஷனரி தொடங்கிய பள்ளியில் ஆசிரியர்களாக இருந்தனர் பாண்டியனின் பெற்றோர். காமக்காபட்டி கள்ளர் சீரமைப்புத் துறைப் பள்ளியில் ஆரம்பக்கல்வி. பின்னர், உசிலம்பட்டி போர்டு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் பாண்டியன். மேடையில் கன்னிப்பேச்சு சிறந்த பேச்சாளர். உசிலம்பட்டியில் 8-ம் வகுப்பு படித்தபோது அவரைக் கேட்காமலேயே பேச்சுப் போட்டியில் சேர்த்துவிட்ட ஆசிரியர், “உன் அப்பா வாத்தியார்தானே, அவரை எழுதித் தரச் சொல்லிப் பேசு” என்று சொல்லிவிட்டார். தந்தையோ, “படிக்கிற வயசுல மேடையேறுன யாரும் உருப்பட்டதில்லை” என்று சொல்லிவிட்டார். உரை எழுதிக் கொடுத்து பயிற்சியும் தந்தவர் அண்ணன் தா.செல்லப்பா. பிற்காலத்தில் கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர் இவர். ஒருகட்டத்தில் “நீயே போட்டிக்குத் தயாராகு” என்று அண்ணன் தந்த ஊக்கத்தில் சிறந்த பேச்சாளராக உருவானார் பாண்டியன். காரைக்குடி கம்பன் கழகத்துக்கும் இதில் ...