Posts

மெளன மஞ்சத்தில் விளையாடும் செல்ல குழந்தை/ கலா

Image
 மெளன மஞ்சத்தில் விளையாடும் செல்ல குழந்தை நீயே.. குட்டி குட்டி வார்த்தைகள் செல்லமாய் நீ உதிர்க்கையில் மனமோ மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடுகிறது .. கோடி கொடுத்தாலும் தேடி அலைந்தாலும்  கிடைக்காது மழலை உன் கொஞ்சல்கள் செல்ல சினுங்களில் புரியும் தாய்க்கு பிள்ளைகளின் தேவைகளை.. ஓவ்வொரு அசைவும் தாய்க்கு மட்டுமே புரியும் கலா

மலையாளபடமான ஹ்ரிதயம் பற்றி ஒரு கருத்து பரிமாற்றம்/உமாதமிழ்

Image
  சமீபத்தில்   Hot Star   OTT தளத்தில்நான் பார்த்த மலையாளபடமான ஹ்ரிதயம் பற்றி ஒரு கருத்து பரிமாற்றம் இந்த படத்தின் தொடக்கத்தில் ஒரு வசனம் வருது . ரயிலில் ஒரு கதாபாத்திரம்   சென்னைக்கு செல்லும் ப்ரணவ் மோகன்லாலிடம் ‘4 ஆண்டுகள் முடிந்து சென்னையிலிருந்து ஊருக்குத் திரும்பி வரும்போது இதயத்தைப் பிழியும் ஒரு வலி ஏற்படும் ’ என்று   சொல்றது   சரியாக இருக்கிறது   இடைவேளையின் போது ப்ரணவ் மோகன்லால் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு ரயிலேறி செல்வார் அப்போது   அந்த கதாபாத்திரம் சொன்ன இதயத்தைப் பிழியும் அந்த வலியை நாம் பார்வையாளர்களாக உணர முடிகிறது   : கதை என்றால் நாம் ஏற்கனவே   பார்த்த வாழ்க்கையின் மூன்று படிநிலைகளை சொல்லும் ‘ ஆட்டோகிராஃப் ’, ‘ பிரேமம் ’, ‘ அட்டக்கத்தி ’ பாணியில் ஆனா இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசன் தனக்கே உரிய   பல மனதை அள்ளும் காட்சிகளால் நல்ல திரைக்கதையுடன்   அழகான ஒரு படத்தை கொடுத்துள்ளார் என சொல்லலாம் .   +2 முடித்துவிட்டு கேரளாவிலிருந்து சென்னைக்கு...

செடி கொடிகள் போல உங்களுடைய முடியும் தாறுமாறாக வளர்ந்து கொண்டே செல்ல வேண்டுமா

Image
  செடி கொடிகள் போல உங்களுடைய முடியும் தாறுமாறாக வளர்ந்து கொண்டே செல்ல வேண்டுமா? அப்போ இந்த ‘கிரீன் ஹேர் பேக்’ மட்டும் போதுமே. தலைமுடியை வளர்ப்பதற்கு நிறைய காசு கொடுத்து கெமிக்கல் கலந்த, நிறைய பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட்டு விடுங்கள். அது பக்க விளைவுகளை தான் ஏற்படுத்தும். உங்கள்  வீட்டின்  அருகில் இருக்கும் செடி கொடிகளில் இருந்து இந்த பச்சை நிற இலைகளை எல்லாம் பறித்து ஒன்றாக அரைத்து உங்கள் தலையில் ஒரு பேக் போட்டால் போதும். தலைமுடி பசுமையான செடிகள் போல தாறுமாறாக வளர்ந்து கொண்டே செல்லும். இயற்கையான ஒரு கிரீம் ஹேர் பேக்கை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். முதலில் நல்லெண்ணெயில், 4 மிளகை போட்டு வெதுவெதுப்பாக சூடு செய்து அந்த எண்ணெயை உங்களுடைய தலையில் மயிர் கால்களில் படும்படி நன்றாக தடவி 30 நிமிடங்கள்  அப்படியே  விட்டு விடுங்கள். அதன் பின்பு இந்த ஹேர் பேக் போட்டால் செம ரிசல்ட் கிடைக்கும். ஹேர் பேக் அரைக்க தேவையான பொருட்கள். வேப்பிலை – 1 கைப்பிடி,  கறிவேப்பிலை – 1 கைப்பிடி, மருதாணி – 1 கைப்பிடி, செம்பருத்தி இலை  –  1 கைப்பிடி, அலோ வெற ஜெல் – 4...

வடித்த சாதம் குழைந்துவிட்டதா..? கவலையை விடுங்க

Image
வடித்த சாதம் குழைந்துவிட்டதா..? கவலையை விடுங்க.. அதை வைத்து 5 வகையான டிஷ் செய்யலாம்..! குழைந்த சாதத்தில் 2 கப் பால் ஊற்றி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஏலக்காய் தட்டிப் போட்டு கிளறி மீண்டும் 5 நிமிடத்திற்கு சுட சுட கொதிக்க வைத்து குடிக்கலாம். தயிர் சாதம் : 1 கப் பால் , தயிர் ஊற்றி கரைத்துக்கொள்ளுங்கள். பின் கடாய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு , கறிவேப்பிலை, பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் , கொத்தமல்லி சேர்த்து தாளித்து தயிரில் கொட்டி கலந்து சாதத்தில் ஊற்றி கிளறுங்கள்.  ரைஸ் புட்டிங் : குழைந்த சாதத்தில் 2 கப் பால் ஊற்றி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஏலக்காய் தட்டிப் போட்டு கிளறி மீண்டும் 5 நிமிடத்திற்கு சுட சுட கொதிக்க வைத்து குடிக்கலாம். அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் இதில் திராட்  பகோடா : 3 கப் சாதத்தை கைகளில் பிசைந்துகொண்டு அதோடு கடலை மாவு 2 ஸ்பூன். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி , உப்பு மற்றும் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். பின் கடாய் வைத்து எண்ணெய் காய்ந்ததும் பகோடா போல் போட்டு எடுங்கள். அவ்வளவுதான் : தோசை : 3 பவுல் சாதத்தை கு...

அட்ட காப்பி அடித்த ஹெச் வினோத்.. அதே படம் தான் வலிமை

Image
  அட்ட காப்பி அடித்த ஹெச் வினோத்.. அதே படம் தான் வலிமை என குற்றம் சாட்டிய பிரபலம் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் வலிமை. பலமுறை பட ரிலீஸ் தள்ளிப் போனதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்து இருந்தது. இன்று அதிகாலை முதலே அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன்  வலிமை படத்தைப் பார்த்த ரசிகர்கள் மத்தியில் நேர்மையான கருத்துக்கள் வந்தாலும் சில எதிர்மறையான கருத்துகளும் வருகிறது. வலிமை படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதியில் ரசிகர்களை ஏமாற்றி உள்ளார் ஹெச் வினோத் என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை கூறிக்கொள்கிறார்கள். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் வால்டர் வெற்றிவேல் படத்தின் அட்ட காப்பிதான் வலிமை படம் என கூறியுள்ளார். பி வாசு இயக்கத்தில் சத்யராஜ், சுகன்யா நடிப்பில் வெளியான திரைப்படம் வால்டர் வெற்றிவேல். இப்படத்தில் சத்யராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அதேபோல் வலிமை படத்தில் அஜித்தும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.வால்டர் வெற்றிவேல் படத்தில் தம்பி அப்பாவி போல் நடித்து வில்லனாக இருப்ப...

உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டுமா?

Image
  உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டுமா? அப்போ ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் போதும் பொதுவாக தேங்காய் எண்ணெயில் பல பயன்கள் நிறைந்துள்ளது. இதனை நன்கு அறிந்து கொண்ட நமது முன்னோர்கள் சமையல் முதல் தோல் வரை அனைத்திற்கும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தனர். நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள இந்த தேங்காய் எண்ணெய்யை நாம் தினமும் பயன்படுத்தி வருவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க.. காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் குடித்தால் உடல் எடை குறையுமாம். உடலில் தேவையில்லாமல் சேரும் கொழுப்புகளை கரைத்து கல்லீரல் வீக்கம் அடையாமல் தடுக்கின்றது. தினமும் முடிகளில் தேங்காய் எண்ணெய் தேய்த்து வருவதால் வேர்கள் ஊக்கம் பெற்று கூந்தல் அடர்த்தியாக வளர உதவுகின்றது. தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் உடல் சூடாகாமல் எப்பொழுதும் சமமான வெப்ப நிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நன்மைகளை தருகின்றது. இதனை அழகு சாதன பொருளாகவும் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய்யை தினமும் பற்கள் மற்றும் ஈறுகளில் மசாஜ் செய்தால் பற்கள் பள பளவென்று மின்னும். ...

காரைக்குடி சிக்கன் கோலா உருண்டை குழம்பு

Image
  காரைக்குடி சிக்கன் கோலா உருண்டை குழம்பு நம்மில் பலருக்கு அசைவ உணவுகள் என்றால் கொள்ளை பிரியம். சிக்கன், மட்டனில் பல விதமான சுவையான டிஷ்கள் செய்யலாம். ஆனால் நம்மில் பலரோ அதே குழம்பு, கிரேவி, வறுவல் என அரைத்த மாவையே அரைத்து கொண்டிருப்போம். எனவே இந்த பதிவில் பெரும்பாலனோர்களுக்கு தெரியாத அதே சமயம் சுவையான காரைக்குடி பேமஸ் சிக்கன் கோலா உருண்டை குழம்பு ரெசிபி பற்றி இந்த பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: எலும்பு நீக்கிய சிக்கன் – 1/2 கிலோ பச்சை மிளகாய் – 4 பொட்டுக் கடலை – 1/4 கப் மிளகாய் தூள் -1 மல்லி தூள் – 1 பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 2 பட்டை,கிராம்பு – 2 இஞ்சி, பூண்டு – சிறிது தேங்காய் துருவல் – 1/4 கப் உப்பு – தே.அளவு செய்முறை: முதலில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, தேங்காய் துருவல், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும். பின்னர் கோலா உருண்டை பிடிக்க சிக்கன், வெங்காயம், பச்சை மிளகாய், பொட்டுக் கடலை, உப்பு சேர்த்து சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து சிறு சிறு உருண்டையாக பிடித்து கொள்ளவும். இப்போது கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு போட்டு பொரிந்ததும் அதில் நறுக்கிய வெங...